» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி: திருமணமான 5 மாதத்தில் சோகம்!!

வெள்ளி 22, நவம்பர் 2019 3:48:22 PM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிழந்தார். 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் குமார் மகன் சந்ரு (24). கோவில் பூசாரியான இவருக்கு திருமணமாகி 5 மாதங்களாகிறது. இவர் நேற்று மாலை தனது பைக்கில் கேடிசி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் மீது வேன் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications

Black Forest Cakes






Thoothukudi Business Directory