» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பி.எம்.சி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

வெள்ளி 22, நவம்பர் 2019 3:28:05 PM (IST)தூத்துக்குடி, மில்லர்புரத்தில் செயல்பட்டு வரும் பி.எம்.சி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழாவில் பள்ளியின் முன்னாள் நிர்வாகி கிரீடா ஐசக், நிர்வாகி ஜோசப் ஜான் கென்னடி, முதல்வர் அலாய் டொம்னிக் சுபாஷ் மற்றும் நிறுவனத்தில் முன்னர் பணிபுரிந்த 13 ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இறைவணக்கத்துடன் விழா ஆரம்பமானது. முன்னாள் மாணவர் கோபால்சாமி அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது. 

மதிய உணவிற்குப் பிறகு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றது. நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டதுடன் அனைவரும் குழு புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். விழா ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் கோபால்சாமி, முத்து சண்முகம், மகேஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory