» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஒலை பெட்டி முடையும் பயிற்சி

வெள்ளி 22, நவம்பர் 2019 3:16:41 PM (IST)தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கணியன் காலனியில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஓலை பெட்டி முடையும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது தமிழகம் முழுவது பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதற்கு மாற்று வழியாக பழைய காலங்களை போலவே ஓலைப் பெட்டியை பயன்படுத்த பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. அதுபோலவே ஸ்ரீவைகுண்டம் இரட்டை திருப்பதி சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பில் ஓலை பொருள்கள் செய்யும் நான்கு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் நடந்தது. அதில் பெட்டி, கிலுக்கு, வண்ணப்பெட்டி, மிட்டாய் பெட்டி, மிளகு பெட்டி போன்ற பல்வேறு பெட்டிகளை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த பயிற்சியை பயிற்சியாளர் டாக்டர் பால் பாண்டி நடத்தினார். முதல் கட்டமாக செந்தாமரை மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 15 பேருக்கு பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழாவிற்கு அற்கட்டளை கள இயக்குனர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் மக்கள் நல சங்க தலைவர் பிச்சை கண்ணு, செயலாளர் கந்தசாமி, பொருளாளர் கருத்தபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவன் வரவேற்றார். கிராம சேவகர் செல்வி, மகளிர் குழுவை சேர்ந்த காஞ்சனா, கலா, பவுலின் உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம சேவகர் சந்திரியா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory