» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசுப்பேருந்து இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி : மாவட்டஆட்சியருக்கு எம்பவர் சங்கர் மனு

வெள்ளி 22, நவம்பர் 2019 1:51:44 PM (IST)

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணிக்கு அரசுப்பேருந்து இயக்கபடாததால் மாணவர்கள், மாணவிகள் சிரமம் அடைந்து வருவதாக தூத்துக்குடி ஆட்சியருக்கு எம்பவர் அமைப்பு இயக்குனர் சங்கர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து எம்பவர் சங்கர், மாவட்டஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,  நீண்ட காலமாக தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி வழித்தடம், சிலோன் காலனி வழித்தடம், மாப்பிள்ளையூரணி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த 3சி, 4இ 12ஏ, 12பி  ஆகிய அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். இப்பகுதியில் தனியார் சிற்றுந்துகள் சுமார் 28 எண்ணம் இயக்கப்பட்டு வருகிறது. ஆகவே வருவாய் நஷ்டம் ஏற்படுவதற்கு எவ்வித வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. 

அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பஸ் பாஸ் வைத்திருந்தும் மாணவ மாணவிகள் இலவசமாக பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோருக்கு கூடுதல் பணம் செலவாகிறது.ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு உடனடியாக மேற்படி வழித்தடங்களில் அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory