» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரஜினிகாந்த் 2021 ல் அதிசயம் என படம் நடிக்கலாம் : காங்கிரஸ் தலைவர் அழகிரி பரபரப்பு பேட்டி

வெள்ளி 22, நவம்பர் 2019 12:34:54 PM (IST)தமிழக மக்களுக்காக இதுவரை நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்தார் ? அவர் 2021ல் அதிசயம் என படம் நடிக்கலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தூத்துக்குடிக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு இதுவரை சந்தித்திராத பொருளாதார வீழ்ச்சியை தற்போது கண்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல்வேறு துறைகளில் 8.5 சதவீதம் அளவுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது. 

ஆட்டோமொபைல், ஐடி துறை என பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். அதை மறைக்கவே அயோத்தி பிரச்சனை, சபரிமலை பிரச்சனை என மத்தியஅரசு பொதுமக்களை திசை திருப்புகிறது. தற்போதைய மோடி அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது எனக் கூறுகிறது. ஆனால் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சியில் ரூ 72,000 கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 2021ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிசயம் நடைபெறும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஒருவேளை அவர் 2021 ஆம் ஆண்டு அதிசயம் என்ற பெயரில் படம் வேண்டுமானால் நடிக்கலாம் .

ரஜினிகாந்த் இதுவரை எந்த மக்கள் பிரச்சனைக்காவது குரல் கொடுத்தது உண்டா ? அயோத்தி பிரச்சனை, காவேரி பிரச்சனை என எதற்கும் அவர் குரல் கொடுத்தது கிடையாது, ரூ 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு எந்தவித நல்லதும் செய்ததில்லை. நடிகர்கள் நாடாண்ட காலம் எம்ஜிஆருடன் முடிந்துவிட்டது. தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பொதுமக்கள் விரும்பவில்லை மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தங்கள் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடக்கும் என்ற அச்சம் நடிகர்களிடம் உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு எவ்வித பணிகளும் செய்யாமல், இட ஒதுக்கீடும் செய்யாமல் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிப்பது ஏமாற்று வேலை. திமுக காங்கிரஸ் உறவில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory