» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டப் பணி ஆய்வு கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெள்ளி 22, நவம்பர் 2019 11:24:22 AM (IST)

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டப் பணி தொடர்பான ஆய்வுகூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டப் பணி தொடர்பான ஆய்வுகூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன், மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆய்வு கூட்டத்தில் தற்போது நடைபெறுகின்ற வாக்காளர் சரிபார்ப்புத் திட்டப் பணி முன்னேற்றம் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்து 16.12.2019 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு ஏதுவாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிப்பதற்கு அறிவுரைகள் வழங்கினார்கள். கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தனிவட்டாட்சியர் (தேர்தல்) மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes


Thoothukudi Business Directory