» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக எம்.பி.க்கள் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை வரும்: ‍ அமைச்சர் கடம்பூர் செ ராஜூ

வெள்ளி 22, நவம்பர் 2019 11:18:38 AM (IST)

திமுக எம்.பி.க்கள் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை வரும் - மக்களே அவர்களை உள்ளே விடமாட்டார்கள்என  அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கூறினார்.

கோவில்பட்டி அருகே முடுக்கு மீண்டான்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிள், கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்களை அழைத்து பேசி, யார் யாருக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்குவது என முடிவெடுக்கப்படும். அதற்கு முன் அவசரப்பட்டு கூட்டணி கட்சிகளுக்ககாக மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என மாற்றப்பட்டது என கூறிவது சரியாக இருக்காது.

திமுகவின் இரட்டை வேடம் நாட்டுக்கே தெரிந்தது தான். திமுக மத்திய காங்கிரஸ் அரசில் பங்களிபோடு இருந்த நேரத்தில், தமிழகத்தில் முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கையில் நடந்த படுகொலைகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம். பெயரளவுக்கு உண்ணாவிரதம் எனக்கூறி, 2 மணி நேரம் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி விட்டு போர் நிறுத்தப்பட்டுவிட்டது என் கூறிய காரணத்தால் தான், அங்கே ஆங்காங்கே பதுங்கியிருந்த தமிழர்கள் வெளியே வரத்தொடங்கினர். அதன் பின்னர் தான் கொத்து கொத்தாக லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாறு, இனப்படுகொலை நடந்தது. இதற்கு முழுமுதற் காரணம் திமுக தான்.

தற்போதும் 7 பேர் விடுதலையில் இரட்டை வேடம் போடுகின்றனர். திமுக ஆட்சியில் இருந்தபோது சட்டமன்றத்தில் அவர்கள் விடுதலைக்கு தீர்மானம் கொண்டுவரவில்லை. அவர்கள் 7 பேரும் 27 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். இதில் 2 முறை திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத, தமிழர்களை பற்றி கவலைப்படாத திமுக, இன்று எதிர்கட்சியான பின்னர் தமிழ் உணர்வு, தமிழர் என்று வேஷபோடுகின்றனர். ஆனால், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என முதன் முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். அவரது வழியில் தமிழக அரசு 7 பேர் விடுதலைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் இயக்கம் தான் அதிமுக.

தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற என்றைக்காவது திமுக எம்.பி.க்கள் மக்களவையில் குரல் கொடுத்துள்ளனரா?. இனிமேல் 38 திமுக எம்.பி.க்கள் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை வரும். நாங்கள் அதிமுக மூலம் எச்சரிக்கிறோம் என நினைக்க வேண்டாம். மக்களே அவர்களை உள்ளே விடமாட்டார்கள். சொன்ன ஒரு வாக்குறுதியில் ஒன்று கூட அவர்களால் செய்ய முடியாது. நடைமுறைக்கு சாத்தியப்படாத வாக்குறுதிகள் குறித்து மக்கள் திரும்பி கேட்கும்போது, ஒரு மக்களவை உறுப்பினரும் நடமாட முடியாத நிலை விரைவில் ஏற்படும், என்றார் அவர்.

நாங்கள் அதிமுக கூட்டணியில் இல்லையென பொன்.ராதாகிருஷ்ணன் குறித்து கேட்டபோது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவர் இல்லை. டெல்லியில் தலைமையிடத்தில் தேசிய செயற்குழு உள்ளது. அவர்கள் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள். மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தொல்லியல் துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது,கீழடியில் நடைபெற்ற தொல்லியல் மூலமாக அனைத்து கலாச்சாரத்திற்கு முதன்மையானது நமது கலாச்சாரம் தான் மூத்தது முதன்மையானது என்பதை நிரூபித்துள்ளோம் என்றார்


மக்கள் கருத்து

KumarNov 24, 2019 - 07:57:45 PM | Posted IP 162.1*****

Then why Mr.karunanithi AC tappavodea unnaveratha nadagam iruthare DA nonnea

காசிலிங்கம்Nov 22, 2019 - 05:46:23 PM | Posted IP 108.1*****

சபாஷ் சுடலை தம்பிக்கு வாழ்த்துக்கள்

ராமநாதபூபதிNov 22, 2019 - 12:02:16 PM | Posted IP 162.1*****

ஒரு மாநில கட்சி இன்னொரு நாட்டில் நடக்கும் போரை நிறுத்தலாம் என்றால் இன்னொரு மாநில கட்சியான நீங்கள் ஏன் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்கக்கூடாது மிஸ்டர் டுபாக்கூர் ராஜு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory