» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

வெள்ளி 22, நவம்பர் 2019 8:36:45 AM (IST)

விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் டாக்டர் ஜோதிமணி தமிழக முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜோதிமணி. பல ஆண்டுகளாக தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கிய போது டாக்டர் ஜோதிமணி அமமுக கட்சியில் இணைந்தார். தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

இந்நிலையில் நேற்று தென்காசி புதிய மாவட்டத்தை துவக்கி வைப்பதற்காக தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டாக்டர் ஜோதிமணி அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கடம்பூர்ராஜு, உதயகுமார், எம்எல்ஏக்கள் எஸ்பி.சண்முகநாதன், சின்னப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory