» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக மீன்வளத் தின விழா

வெள்ளி 22, நவம்பர் 2019 8:28:41 AM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்ல}ரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தும் "உலக மீன்வளத் தினத்தையொட்டி மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - பொறுப்பார்ந்த மீன்பிடிப்பு முறை” ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் துவக்க விழாவானது நேற்று மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் கடல் சார் பயிற்சி மையம் அமைந்துள்ள கடலோர வளாகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மரியாதைக்குரிய துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவர் தமது சிறப்புரையில் தூத்துக்குடி மற்றும் தேங்காய்பட்டினத்தில் அமைக்கப்பட்டுவரும் ஆழ்கடல் மீன்பிடிப் பயிற்சி மையங்களின் முக்கியத்துவத்தையும் தூத்துக்குடியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள நான்கு ஆண்டுகால இளநிலை மீன்வள மலுமிக்கலை தொழில்நுட்பவியியல் பட்டப்படிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும் அவர் மீன்பிடிப்பு தொழில்நுட்பத்தைப் பற்றிய ஒளிநாடா அடங்கிய மூன்று குறுந்தகடும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பு பற்றிய ஏழு துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டதோடு உலக மீன்வளத்தினத்தையொட்டி மீன்வளக்கல்லூரியில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 50 மீனவர்கள் நிகழ்;ச்சியில் பங்கு கொண்டார்கள். கல்லூரியின் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் கடல் சார் பயிற்சி மைய்யத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் நீ. நீதிச்செல்வன் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் கடல்சார் பயிற்சி மையத்தின் செயல்பாடுகளை விளக்கியதோடு வரவேற்புரை நிகழ்த்தினார்;. மீன்வளக் கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) ப. வேலாயுதம், தமது தலைமை உரையில் மீன் உணவின் முக்கியத்துவத்தை எடுத்து கூறியதோடு மீனவர்களுக்கு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வழங்கும் பல்வேறு பயிற்சிகளைப்பற்றி எடுத்துரைத்தார். மீன்வளத் துறையின் தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர்  ந. சந்திரா தமது வாழ்த்துரையில் மீன்வளம் நீண்டகாலம் நிலைத்திருக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் தேவைப்படுகின்றன இந்தச் சூழ்நிலையில் உலக மீன்வளத்தினத்தில் பொருப்பார்ந்த மீன்பிடிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்துவது மிகவும் பொறுத்தமானது எனக் குறிப்பிட்டார். 

மாலுமி தலைவர் செ. விஸ்வநாதன், முதல்வர் (பொ), இளநிலை மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பக்கல்லூரி வாழ்த்துரையில் மாலுமிகலை மற்றும் தொழில்நுட்பம் பற்றிய கல்வி எவ்வாறு பொறுப்பார்ந்த மீன்பிடிப்பு முறைக்கு பயன்படும் என்பதை விவரித்தார். மேலும் அவர் மாணவர்களுக்கு கடலில் வேலைப்பார்க்கும் திறன் மற்றும் கடல் சார் ஓழுக்கம் பற்றிய பயிற்சி கொடுக்கப்படுவதாக அறிவித்தார். கல்லூரியின் மீன்வள விரிவாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் இரா. சாந்தகுமார் நன்றியுரை ஆற்றினார். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியில் துறையின் உதவிப் பேராசியரியர் த. இரவிக்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விடுதி நாள் விழா

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது.  பல்கலைக்கழகத்தின் துனைவேந்தர் எஸ். பெலிக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். அவர் தனது உரையில் மாணவர்கள் படிப்பு சாராத மேம்பாடுட்டு செயல்பாடுகள், தனித்திறமைகளான விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார். மேலும் அவர் பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் படிப்பு சாராத மேம்பாடுட்டு செயலகத்தின் பங்கு குறித்து விளக்கி கூறினார். விடுதிக் காப்பாளர் பா. பார்த்திபன் விடுதிக்கான 2018-2019 ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 

மேலும் விடுதியின் பாதுகாப்பு மற்றும் வசதியான தங்குமிடம் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை கூறினார். வெற்றிப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர், எம். சுந்திரா பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மாணவியர் விடுதி துணைக் காப்பாளர் மணிமேகலை வரவேற்புரை வழங்கினார். ஆண்கள் விடுதி மாணவ செயலர் ஸ்ரீபாலாஜி நன்றி உரை கூறினார். விழா ஏற்பாடுகளை ஆண்கள் விடுதி மாணவ செயலர் செல்வன் ஸ்ரீபாலாஜி மற்றும் மாணவியர் விடுதி செயலர் சுபைதத்துள் ஹசன்னா ஆகியோர் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர். மாணவ உணவகச் செயலர் சிவக்குமார் மற்றும் மாணவியர் உணவகச் செயலர் தாமரைச்செல்வி ஆகியோர்களால் சிறப்பாக செய்யப்பட்டிருந்த சிறப்பான இரவு விருந்துக்குப் பிறகு விழா இனிதே நிறைவு பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory