» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

2021-ல் அதிமுக ஆட்சி மலரும் என்பதே ரஜினி கூறிய அதிசயம் : முதல்வர் பழனிசாமி விளக்கம்

வியாழன் 21, நவம்பர் 2019 5:08:54 PM (IST)"2021-ல் அஇஅதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருக்கிறார்" என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தென்காசி தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக நாளை (22ம் தேதி) உதயமாகிறது. அதனை துவங்கி வைக்க வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்திறங்கினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: மறைமுக தேர்தல் என்ற சட்டத்தை கொண்டு வந்ததே திமுக தான் அதை திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது. 

உள்ளாட்சி அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் 31-06-2006 அன்று உள்ளாட்சி தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும் என அறிவித்தார், அசாம், குஜராத் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று தான் நடத்தப்படுகிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றினார். நேரடி தேர்தல் நடத்தப்பட்டதால் விழுப்புரம் உள்ளிட்ட சில நகராட்சிகள் செயல்படாமலே இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார். நேரடி தேர்தலை கொண்டு வந்ததும் திமுகதான் 2006இல் மறைமுக தேர்தல் என கொண்டு வந்ததும் திமுக தான். ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சிகளில் எப்போதும் மறைமுக தேர்தல் தான் நடத்தப்படுகிறது. 

மறைமுக தேர்தல் என ஸ்டாலின் சொன்னால் சரி? நாங்கள் சொன்னால் தவறா? மறைமுக தேர்தல் முறைக்கு பாஜகவின் பொன் ரதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தெளிவாக குறிப்பிட்டுள்ளதான் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை சட்டரீதியாக தடுக்க முடியாது அது தன்னாட்சி அமைப்பு. அனைத்து ஏழை மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே ரேஷன் பொருட்கள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவது நல்ல மழை பொழிவை பெற்றுள்ளோம். குடிமராமத்து பணிகள் 100 சதவீதம் முழுமையாக முடிந்து விட்டது. தன்னாட்சி அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும். 

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த பணி முடிவடைந்த பின் நிதி வழங்கப்படும். பொங்கல் பரிசு உயர்த்தி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை, இருந்த போதும் உயர்த்துவது பற்றி பரிசீலீக்கப்படும். 2021 ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கிறார். அஇஅதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று நடிகர் ரஜினி கூறியிருக்கலாம். 2021ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் என்றார். பேட்டியின் போது அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, ஆவின்  தலைவர் என் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் சண்முநகாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் அதிமுக சார்பிலர் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து

இவன்Nov 21, 2019 - 05:45:01 PM | Posted IP 162.1*****

படித்தவர்கள் எல்லாம் ஒதுங்கி இருக்கிறார்கள் , கூத்தாடிகள் , திருடர்கள் எல்லாம் ஆட்சிக்கு வருகிறார்கள்... நாட்டிற்கு எதிர்காலம் கடவுளுக்கு தான் தெரியும் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes


Anbu Communications

Nalam PasumaiyagamThoothukudi Business Directory