» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் : கனிமொழி எம்பி., பங்கேற்கிறார்

புதன் 20, நவம்பர் 2019 7:43:17 PM (IST)

நவம்பர் 23, 24-ல்  கனிமொழி கருணாநிதி எம்பி., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இணைந்து மதுரை அப்போலோ, சென்னை கற்பக விநாயகா, நெல்லை அரவிந்த் மருத்துவமனைகள் நடத்தும் மாபெரும் மெகா இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற கீதாஜீவன் எம்எல்ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி எம்எல்ஏ., கீதாஜீவன் வெளியிட்ட செய்திகுறிப்பில், தூத்துக்குடி தொகுதி எம்பி.,  கனிமொழி கருணாநிதி மற்றும் எனது (கீதாஜீவன்) ஏற்பாட்டில் வருகிற 23, 24 சனி மற்றும் ஞாயிறு இருதினங்களில் மதுரை அப்போலோ மருத்துவமனை, சென்னை கற்பக விநாயகா பல்மருத்துவக் கல்லூரி, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. 

23.11.2019, 24.11.2019 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை கற்பக விநாயகா பல்மருத்துவக் கல்லூரி நடத்தும் இலவச பல்மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய பல்கட்டுதல், பல் அடைத்தல், பல் எடுத்தல், பல் சுத்தம் செய்தல், பல் சொத்தை நீக்குதல் உள்ளிட்ட அனைத்து சம்பந்தமான சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படும். பல் கட்ட விரும்புபவர் 23.11.2019 அன்றே முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

24.11.2019 அன்று நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் மதுரை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் பங்கு கொள்ளும் பொது மருத்துவ முகாம் நடைபெறும். இந்த முகாமில் இரத்தம், சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி. எக்கோ, ஸ்கேன், நுரையீரல் சோதனை, பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். 

அதேபோல நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சர்ர்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கண் சம்பந்தபட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் இலவசமாக பார்க்கப்படும். முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராஜ்குமார்Nov 21, 2019 - 11:54:04 AM | Posted IP 162.1*****

எங்க டா நடக்கத்து

கர்ணராஜ்Nov 21, 2019 - 08:21:23 AM | Posted IP 108.1*****

நல்ல செயல். பாராட்டுக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory