» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி மோதி விபத்து : பெண் பலி

புதன் 20, நவம்பர் 2019 7:04:53 PM (IST)தூத்துக்குடியில் இரு சக்கர வாகனமும் காரும் மோதிய விபத்தில் கீழே விழுந்த பெண் ஒருவர் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லதா (45). லெஞ்சிபுரத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது மனைவி வனபேச்சி (31). இருவரும் தூத்துக்குடி என்டிபிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இன்று மாலை வேலை முடிந்து டிடிபிஎஸ் ரவுண்டானா அருகே  இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, அவர்களுக்கு முன்னால் சென்ற கார் பிரேக் பிடிக்கவும், வண்டி ஓட்டி வந்த லதா பிரேக் பிடித்துள்ளார்.  

இதனால் காரில் முட்டி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரி இருவர் மீதும் மோதியது. இதில் லதா , லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வனபேச்சி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory