» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டி

புதன் 20, நவம்பர் 2019 6:29:48 PM (IST)நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அதிமுக கிடையாது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்தால் எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார்.

தமிழக முதல்வரின்  சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  விளாத்திகுளத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவது தான் இலக்கு என டி.டி.வி.தினகரன கூறியிருப்பது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது.

ரஜினி, கமல் இருவரும் திரைப்படத்துறையில் இணைந்து பணியாற்றுகின்றனர். அதே போல் அரசியலுக்கு வந்தால் இணையட்டும். எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை. ஏனென்றால், கமலஹாசன் மக்களவை பொதுத்தேர்தலில் சந்தித்துள்ளார். அவர் எத்தனை வாக்கு சதவீதம் பெற்றார், அதிமுக எத்தனை வாக்கு சதவீதம் பெற்றது என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்து உள்ளது. 

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கிடையாது அதிமுக. யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை,மக்களவை தேர்தலில் மக்கள் வேறு நிலைப்பாட்டை எடுத்தாலும், அதனுடன் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என 9 தொகுதிகளில் வெற்றியை வழங்கினர். தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக உள்ளது.எனவே எங்களுக்கு இவர்களைப் பற்றி கவலை இல்லை,யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும்,2021-ம் ஆண்டு மக்களவை தேர்தல் வராது. 

தமிழகத்தில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். இது அமல்படுத்தப்பட்டால் திரைத்துறை அனைத்து நிலைகளில் சீர்படுத்தப்படும். எந்த திரைப்படம் வெளியிடப்பட்டாலும், அதற்கு திரையரங்குகள் தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் அறிவுறுத்தி உள்ளோம். இதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், உறுப்பினர்கள் நியமிக்கும்போது சீராக எந்தெந்த தேதிகளில் எந்த திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்து அந்த தேதியை அறிவிக்க வேண்டும். அப்போது அனைத்து திரையரங்குகளிலும் பாரபட்சமில்லாமல் திரைப்படங்களை திரையிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். கிட்டதட்ட இப்போது அது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. 

விரைவில் அது முழுமையாக நடைமுறைக்கு வரும்.மாநகராட்சி பகுதிகளில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள திரையரங்கு உரிமையாளர்கள், எங்களுக்கு அந்த திட்டம் தேவையில்லை. எங்களிடம் உள்ள ஒரு திரையரங்கை இரண்டு அல்லது மூன்றாக திரையரங்குகளாக மாற்ற அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த துறையை சேர்ந்தவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை தான் அரசு செய்ய முடியும். 

அதற்குரிய அனுமதியை ஓரிரு தினங்களில் வழங்கப்படும். அதன் மூலம் தமிழகத்தில் திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார் .நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார்கள் ராஜ்குமார் (விளாத்திகுளம்),அழகர் (எட்டயபுரம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

உண்மைNov 20, 2019 - 06:33:13 PM | Posted IP 108.1*****

கூத்தாடிகள் கூத்தாடி கூட்டத்தில் தான் சேரும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications


CSC Computer Education

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory