» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

புதன் 20, நவம்பர் 2019 5:32:35 PM (IST)



பொன் சுப்பையா நகரில் தேங்கியுள்ள மழைநீர் கழிவுநீரை அகற்ற கோரி தூத்துக்குடி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் வடக்கு மண்டலத்தில் உள்ள  17வது வார்டு பகுதியான பொன் சுப்பையா நகர் தஸ்நேவிஸ் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக  மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த நீரை அகற்ற கோரி கடந்த சனிக்கிழமை அன்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்துள்ளனர். சற்று நேரத்தில் வந்து மழைநீரை அகற்றுவார்கள் என அதிகாரிகள் உறுதி அளித்து அனுப்பி உள்ளனர். ஆனால் எந்த அதிகாரியும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வந்து அப்பகுதி மக்கள் மனு கொடுத்து சென்றனர். அப்போது மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டு மாநகராட்சியிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி சொல்லி அனுப்பி உள்ளார். ஆனாலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை தூத்துக்குடி ராமேஸ்வரம் கடற்கரை சாலையில் விவிடி மேல்நிலைப்பள்ளி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அரைமணி நேரத்தில் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes





Thoothukudi Business Directory