» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் ரூ.1.75 கோடி நலதிட்ட உதவிகள் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

புதன் 20, நவம்பர் 2019 5:11:10 PM (IST)விளாத்திகுளத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், 1125 பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, வருவாய்த்துறையின் மூலம் 474 பயனாளிகளுக்கு ரூ.1,49,89,344/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான உத்தரவு மற்றும் 471 பயனாளிகளுக்கு ரூ.4,71,000/- மதிப்பிலான முதியோர் ஒய்வூதியத்திற்கான ஆணைகளையும், கால்நடை பராமாப்புத் துறையின் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.3,10,510/- மதிப்பிலான விலையில்லா வெள்ளாடுகள், வேளாண்மைத் துறையின் மூலம் 11 விவசாயிகளுக்கு தார்ப்பாய், கைத்தெளிப்பான் ரூ.23,351/- மதிப்பிலான விவசாய இடுபொருட்களையும், மகளிர் திட்டத்தின் மூலம் உழைக்கும் 16 மகளிர்களுக்கு ரூ.4,00,000/- மானியத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள், எட்டயபுரம் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மூலம் 129 மாணவிகளுக்கு ரூ.13,41,600/- மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணி என மொத்தம் 1125 பயனாளிகளுக்கு ரூ.1,75,35,805/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதனைத்தொடர்ந்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  இந்நிகழ்ச்சியில், விளாத்தின்குளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கரநாரயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர்கள் ராஜ்குமார் (விளாத்திகுளம்), அழகர் (எட்டயபுரம்), சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் கணேசன் (விளாத்திகுளம்), சங்கரநாராயணன் (எட்டயபுரம்), மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், எட்டயபுரம் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி பேபிலதா, முக்கிய பிரமுகர்கள் பால்ராஜ், ஞானகுருசாமி, தனச்செயன், காந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory