» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தண்டவாளத்தில் திடீர் சத்தம்: திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் தாமதம்

புதன் 20, நவம்பர் 2019 4:46:46 PM (IST)

குடந்தை அருகே தண்டவாளத்தில் சத்தம் ஏற்பட்டதால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் 1½  மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றன.

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்ரயில், இரவு 9.50 மணிக்கு திருநாகேஸ்வரம் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் விபத்தில் சிக்கிகொண்டது என நினைத்து பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் உடனடியாக என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்து பார்த்தார். ரயிலில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்தபின் மெதுவாக கும்பகோணம் கொண்டு வந்தார். 10 மணிக்கு கும்பகோணம் வந்ததும் டிரைவர் இறங்கி, ஸ்டேஷன் மாஸ்டர் பிரியதர்ஷினியிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் திருநாகேஸ்வரம் சென்று சத்தம் கேட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கும் எந்தவித தடயங்களும் இல்லை. இதனிடையே தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்ட தகவல் கிடைத்ததும் அந்த மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த உழவன் எக்ஸ்பிரசை (தஞ்சை-சென்னை) கும்பகோணத்திலும், திருப்பதி எக்ஸ்பிரசை ஆடுதுறையிலும் நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். சத்தம் கேட்ட இடத்தில் எந்த அசம்பாவிதங்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின் 3 ரயில்களையும் மீண்டும் இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்பின்னர் திருச்செந்தூர் ரயில் உள்பட 3 ரயில்களும் ஒன்றரை மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory