» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கால்வாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம் : விவசாயிகள் வேதனை

ஞாயிறு 17, நவம்பர் 2019 6:19:24 PM (IST)செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்த காரணத்தினால் அருகில் உள்ள வயல்காடுகள் தண்ணீரில் மூழ்கியது. தேக்கி வைத்த தண்ணீரும் உடைந்த கால்வாய் வழியாக வெளியேருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறத. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் இரண்டு அணைக்கட்டுகளான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகள் நிறைந்து விட்டது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்நிலையில் மருதூர் அணைக்கட்டில் மேலக்காலில் உள்ள முக்கவர் வாய்க்கால் மூலம் முத்தாலங்குறிச்சி குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இந்த கால்வாயில் நேரடியாக படுகையூர், முறப்பநாடு, பக்கப்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி வடபத்து வழியாக நேரடியாக 200 பாசன வசதி பெறுகிறது. 

இந்நிலையில் கடந்த இருதினங்களாக பெய்த மழையாலும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் இந்த முத்தாலங்குறிச்சி குளம் நிரம்பியது. நேரடி பாசன வசதியில் நடுவை நடும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்த குளத்திற்கு வரும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பால் குளத்திற்கு வந்த வாய்க்கால் நீரும், குளத்தின் ஷட்டர் சரியில்லாத காரணத்தினால் குளத்தின் நீரும் வீணாக இந்த உடைப்பில் இருந்து அருகில் நடப்பட்டிருந்த வயல்வெளிகளில் புகுந்தது. இதனால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நட்ட சுமார் 10 ஏக்கர் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. விவசாயிகள் இதனால் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து இந்த பகுதி விவசாயி பூவம்மாள் கூறும் போது, "எங்கள் கிராமத்தில் உள்ள முத்தாலங்குறிச்சி குளத்துக்கு தண்ணீர் திறக்க சுமார் 20 நாள்கள் காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது குளத்திற்கு தண்ணீர் விட்டார்கள். நாங்கள் சந்தோஷமாக நடுவை பணியை துவங்கினோம். தற்போது குளத்துக்கு வரும் வழியில் உள்ள கரை உடைந்தது. இதனால் தண்ணீர் பெருகி அந்த பகுதியில் உள்ள நட்ட பயிரை மூழ்கடித்து வீணாக ஆற்றில் கலந்தது. இதை விட மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் என்னவென்றால் கடந்த வருடம் குளத்துக்கு அமைக்கப்பட்ட ஷட்டர் உடைந்த காரணத்தினால் குளத்தில் தேக்கி வைத்த தண்ணீரும் இந்த கால்வாய் வழியாக வீணாக ஆற்றுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உடனே இந்த உடைப்பை சீர் செய்ய வேண்டும். முத்தாலங்குறிச்சி குளத்து ஷட்டரை முறையாக சீரமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த ஷட்டரை உடனே சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory