» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூகவலைதளத்தில் அவதூறு டிக்டாக் இளம்பெண் கைது

ஞாயிறு 17, நவம்பர் 2019 1:08:50 PM (IST)

சமூகவலைதளத்தில் அவதூறாக டிக்டாக் செய்தததாக தூத்துக்குடியில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஒரு எண்ணிலிருந்தும் டிக்டாக் செய்தும், ஜாதி பெயரை குறித்தும் சமூகவலைதளங்களில் அவதூறாக பதிவிடப்பட்டிருந்ததாம். 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த சந்தானம் என்பவரது மகள் சுதா (31) கருத்து பதிவு செய்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து சுதாவை கைது செய்து விசாரித்து வருகின்றார். சுதா அழகுநிலையம் வைத்து நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory