» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏ., பேச்சு
ஞாயிறு 17, நவம்பர் 2019 12:57:30 PM (IST)

உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மேயர் பதவியை கைப்பற்றி ஆகவேண்டும் என தூத்துக்குடி எம்எல்ஏ. கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தத்தில் மாநில பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீதாஜீவன் எம்எல்ஏ., பேசுகையில் திமுக., வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சமூக வலை தளங்களில் தவறான பதிவுகள் வருகின்றன எதுவாக இருந்தாலும் எங்கள் கட்சியையும் எங்கள் தலைவரின் வளர்ச்சியையும் தடுக்க நினைக்கும் அவர்களின் எண்ணம் பலிக்காது.
வருகின்ற 2021 ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். தமிழக அமைச்சர் மா.பாண்டியராஜன் மாதம் ஒரு கட்சியில் இருந்தவர். திமுகவை பற்றி அவருக்கு என்ன தெரியும் ?. மிசா சட்டம் வந்த பொழுது மு.க.ஸ்டாலினுடன் என்னுடைய தந்தை பெரியசாமியும் ஒரு வருடம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். மேலும் வைகோ,ஆற்காடு வீராசாமி போன்றோரும் சிறையிலிருந்தனர். சிறையில் பல துன்பங்களை ஸ்டாலின் அனுபவித்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுகவை தேர்வு செய்ய மக்கள் தயாராக உள்ளனர். அதிமுகவின் சூது அறிந்து நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தூத்துக்குடி மேயர் பதவியை கைப்பற்றி ஆகவேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியை மேயர் பதவியை கைப்பற்றினால் மட்டுமே மக்களுக்கு நம்மால் நன்மைகள் செய்ய முடியும். எனவே திமுக நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அதற்கான பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் கரூர் கணேசன் மதுரை சாதுராஜன் தலைமை கழக பேச்சாளர் இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கழக நிர்வாகிகள், பெருமாள் செல்வராஜ், முன்னாள்கவுன்சிலர் பாலகுருசாமி, ராஜ்மோகன்செல்வின் ஆறுமுகம் ரவீந்திரன் ஏஞ்சலா மோகன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார்ரூபன் ராஜமன்னார், பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகரக் கழக நிர்வாகிகள் கீதா முருகேசன், கனகராஜ், நிர்மலா அனந்தையா, நகர ஒன்றிய பகுதி கழக செயலாளர்கள், மீனவரணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னம்மாள் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
வியாழன் 12, டிசம்பர் 2019 8:14:28 PM (IST)

டிசம்பர் 14ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 6:57:24 PM (IST)

திமுக மாவட்ட பிரதிநிதி அதிமுகவில் இணைந்தார்.
வியாழன் 12, டிசம்பர் 2019 6:17:12 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மக்கள் நீதிமன்றம் : மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 3:30:34 PM (IST)

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - ஆட்சியர் தகவல்!!
வியாழன் 12, டிசம்பர் 2019 12:50:44 PM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் டிச.14, 15-ல் போர்க்கப்பலை பார்வையிட அனுமதி : கடற்படை அலுவலகம் தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 12:29:44 PM (IST)

ப. சுகுமார்Nov 19, 2019 - 09:00:30 AM | Posted IP 162.1*****