» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை : 2 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு

ஞாயிறு 17, நவம்பர் 2019 12:40:22 PM (IST)

தூத்துக்குடியில் 25 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை செய்ததாக 2 கள்ளக்காதலி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

சென்னை வானகரம் பழனியப்பநகரை சேர்ந்த முருகேசன் மகன் சுரேன் (28). இவருக்கும்  தூத்துக்குடி மில்லர்புரத்தில் வசிக்கும் பானுமதி (26) என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் வரதட்சணையாக சுமார் 100 பவுன்நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் அளிக்கப்பட்டதாம். பின்னர் பானுமதி சென்னையில் வசித்து வந்துள்ளார். சுரேன் அடிக்கடி திருவண்ணாமலைக்கு சென்ற போது அங்கு வசிக்கும் சக்தி மனோகரன் மகள் துர்காதேவி (21). மேலும் அதே பகுதியினை சேர்ந்த கனகசபாபதி மகள் பிரியா (19) ஆகியோருடன் ரகசிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பானுமதி தனது மாமனாரிடம் கேட்டாராம். அதற்கு ரூ. 25 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு பானுமதியை அவரது மாமனார் முருகேசன் (60). மாமியார் ஜெயலட்சுமி (65). சுரேனின் சகோதரர் ராஜா மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் சேர்ந்த கொடுமைபடுத்தினார்களாம். இதனால் பானுமதி தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டது குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சுரேன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.  


மக்கள் கருத்து

தூத்துக்குடி காரன்Nov 20, 2019 - 02:49:45 PM | Posted IP 162.1*****

நீ எல்லாம் ஆம்பளை தானா

BALANNov 17, 2019 - 11:35:33 PM | Posted IP 173.2*****

pala naal therudan orunal aaha paduvan🤬

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory