» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொதிக்கும் பாலை டீ மாஸ்டர் மீது ஊற்றியதாக டீக்கடை உரிமையாளர் கைது

ஞாயிறு 17, நவம்பர் 2019 12:26:05 PM (IST)

தூத்துக்குடியில்  கொதிக்கும் பாலை டீ மாஸ்டர் மீது ஊற்றியதாக டீக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜாராம் மகன் சுந்தரேஸ்வரன் (38). இவர் 3வது மைலில் டீ கடை நடத்தி வருகின்றார். இவரது கடையில் போல்டன்புரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சதிஷ் (27), மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார் . இவர் சுந்தரேஸ்வரனிடம் ரூ. 2ஆயிரம் கடனாக வாங்கியிருந்தாராம். அதை திருப்பி கேட்கவே இருவருக்கும் தகராறு  ஏற்பட்டதில் சுந்தரேஸ்வரன் கொதிக்கும் பாலை சதிஷ் மீது ஊற்றினாராம். 

இதில் அவருக்கு உடலில் கடும் காயங்கள் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory