» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை : கணவர் உட்பட 4 பேருக்கு வலை

ஞாயிறு 17, நவம்பர் 2019 12:16:51 PM (IST)

தூத்துக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் கார்த்திகா (24). இவருக்கும் முடிவைத்தானேந்தலை சேர்ந்த லட்சுமணன் மகன் வீரகுமார் (29) என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு மே 12 ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது சுமார் 50 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், சீதன பொருட்கள் அளிக்கப்பட்டதாம். வீரகுமார் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திகா தனது மாமனார் வீட்டில் வசித்துள்ளார். 

இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கார்த்திகாவை, அவரது கணவர் வீரகுமார் போனில் அடிக்கடி மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு அவரது தந்தை லட்சுமணன் (58), தாயார் பிரேமா (53), வீரகுமாரின் சகோதரியும் உடந்தையாக இருந்து கார்த்திகாவை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திகா தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிந்து வீரகுமார், உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory