» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வணிகம் ரூ.60,852 கோடியாக அதிகரிப்பு: நிர்வாக இயக்குநர் தகவல்

செவ்வாய் 12, நவம்பர் 2019 5:15:34 PM (IST)தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2019-20 அரை நிதியாண்டில் ரூ.151.07 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின் மொத்த வணிகம் ரூ.60,852 கோடியாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைவர் எஸ்.அண்ணாமலை, மற்றும் நிர்வாக இயக்குநர் தலைமை நிர்வாக அதிகாரி கேவி. நாகேந்திர மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921-ல் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது 98 வருடங்களாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது தற்போது 509 கிளைகள், 1156 ஏ.டி.எம். மையங்கள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களைக் கொண்டு, நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு 4.70 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு சேவையாற்றி வருகிறது.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில் 2019-20 அரையாண்டின் நிதிநிலை தனிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. இதன்படி 2019-20 ஆம் நிதியாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 11.70 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.60,852 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகையில் ரூ.34,068.80 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் ரூ.26,783.69 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை 14.4 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.8,728.59 கோடியாக உள்ளது. ஒரு ஊழியரின் தனிநபர் வணிகம் ரூ.11.04 கோடியாக உள்ளது. provisional Coverage Rate (PCR)75.77 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

2019-20 நிதியாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.15,279.81 கோடியில் இருந்து ரூ.17,442.95 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 14.16 சதவீதம் ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 40 சதவிகிதம் என்ற இலக்கைத் தாண்டி 70.59 சதவிகிதம் என்ற விகிதத்தில் உள்ளது.  2019-20 விசாயத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.6,342.18 கோடியாக உள்ளது. விவசாயத்துறைக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 18.சதவீதம் ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 25.66சதவீதம் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்எஸ்எம்இ துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ. 9137.61 கோடியிலிருந்து ரூ.10,241.71 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 12.08 சதவிகிதம் ஆகும்.

வங்கியின் வைப்புத்தொகை ரூ.34,068.80 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.30,085 கோடி ஆகும். நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குத் தொகை கடந்த நிதிஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.40 சதவீதம் வளர்ச்சி அடைந்து 8,728.59 கோடியாக உள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் 9.79 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.26,783.68 கோடி என்ற நிலையில் உள்ளது. வட்டியில்லா வருமானம் ரூ.229.27கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.202.06கோடி). வங்கியின் இயக்கச் செயலவுகள் ரூ.423.89 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.407.63 கோடி.

வங்கியின் செயல்பாடு லாபம் ரூ.411.24 கோடியில் இருந்து ரூ.440.07 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.151.07கோடி என்ற நிலையில் உள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.616.81 கோடியில்  இருந்து ரூ.634.63 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நகர மதிப்பானது ரூ.3433.16 கோடியில் இருந்து ரூ.3725.10 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 8.50 சதவீதம் ஆகும். வட்டி வருமானம் ரூ.1,697.75 கோடியாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வட்டியானது ரூ.974.50 கோடியில் இருந்து இவ்வரையாண்டில் ரூ.1,063.06 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த கடன்களில் மொத்த வருவாய் ஈட்டா கடன்கள் 4.91 சதவீதம் ஆகவும், நிகர வருவாய் ஈட்டா கடன்கள் 2.40 சதவீதமாகவும் உள்ளது.

நடப்பு ஆண்டடில் புதிதாக புதிதாக 4 ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 30.9.19 நிலவரப்படி ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 1,156 ஆகும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிதாக 15 கேஸ் ரீசைக்ளர் மிஷின்கள் திறக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மனிதவள மேம்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான வங்கி சேவையினை அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு திறன் படைத்த chat bot அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கருவூலத்தில் ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் இந்திரங்கள் நிறுவப்பட உள்ளது. 29 இலாபி மையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதிநவீன கால்செண்டர் செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

POS. கடன் அட்டைகள் முதலானவற்றின் விற்பனையை தீவிரப்படுத்தி CASA வளர்ச்சியை ஊக்குவித்தல், மற்றும சில்லரை வர்த்தக கடன்கள் வழங்குவது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. . வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குநர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாக குழுவின் சீரிய திட்டம், மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பு, வாடிக்கையாளர்களின் ஆதரவு ஆகியவைதான் இச்சாதனைகளை எட்டிட உதவியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது துணைத் தலைவர் சிதம்பரநாதன், வங்கியின் பொதுமேலாளர்கள் செந்தில் ஆனந்தன், சூரிய ராஜ், இன்பமணி, ஆறுமுகபாண்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory