» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயாவில் சாரண, சாரணிய இயக்க தின விழா

சனி 9, நவம்பர் 2019 4:34:56 PM (IST)தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சாரண, சாரணிய இயக்க தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் சாரண, சாரணிய இயக்க கொடி ஏற்றப்பட்டு, பாரத சாரண, சாரணிய இயக்க நிறுவனர் பேடன் பவுல் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாரண, சாரணிய பொறுப்பாசிரியர்கள், சாரண சாரணியர்கள் அனைவரும் "நான் கடவுளுக்கும் தாய்நாட்டிற்கும் எனது கடமையைச் செய்யவும், பிறருக்கு எந்த நேரத்திலும் தொண்டுபுரியவும், சாரண விதியைப் பின்பற்றி நடக்கவும் என்னால் இயன்றவரை முயல என் மானத்தின் மேல் வாக்குறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி கூறினர்.

விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் சண்முகம் தலைமை வகித்து உரையாற்றினார். அதன்பின் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சாரண சாரணிய ஆசிரிய, ஆசிரியைகள் பிரித்விராஜ், ராஜ்பரத், உதயம்மாள் சத்யா முத்துச்செல்வி மணிமேகலை சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory