» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளி காவலாளி திடீர் மரணம்

சனி 9, நவம்பர் 2019 4:22:15 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் பள்ளி காவலாளி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழ்நதார். 

தூத்துக்குடி சிவன் கோவில் - பெருமாள் கோவில் அருகேயுள்ள காலி மனைப் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் ஊர்க்காவல் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்கு இறந்து கிடந்தவர் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த நடராஜன் (60), எனத் தெரியவந்தது. 

மேலும், அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இன்று பிற்பகல் சிவன்கோவில் பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு நடந்து வந்துள்ளார், அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதுதொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory