» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வையில் இலவச கண்பரிசோதனை முகாம்

சனி 9, நவம்பர் 2019 1:29:11 PM (IST)ஆழ்வார்திருநகரியில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கிராமமக்கள் அதிகளவில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குச திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு, ஆழ்வார்திருநகரி கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். 

சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், தன்னார்வ தொண்டர் முத்துராஜ், இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் சரக டி.எஸ்.பி.., சுரேஷ்குமார்  முகாமினை துவக்கி வைத்தார்.

முகாமில், கண் மருத்துவர் கரண் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் ஆழ்வார்தோப்பு, நளராஜபுரம், நவலெட்சுமிபுரம், கேம்லாபாத், ஆழ்வார்திருநகரி, மளவராயநத்தம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். 

முகாமில் பங்கேற்றவர்களில் சுமார் 20பேர் இலவச கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், பகுதி பொறுப்பாளர்கள் முருகசெல்வி, சண்முககனி, மையத்தலைவர்கள் உஷா, ஆயிஷா, சித்திமா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தன்னார்வ தொண்டர் ஆனந்தசெல்வன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory