» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது

சனி 9, நவம்பர் 2019 11:50:40 AM (IST)

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் 2வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (39). இவர் காதர் மீரான் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி காலையில் ஓட்டலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாவில் இருந்த 5ஆயிரம் பணம், மற்றும் கடையிலிருந்த 2 சிலிண்டர்கள், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை திருடு போயிருந்தது. 

இதுகுறித்து அவர் தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுயம்பு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக காதார் மீரான் நகரைச் சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் (19), தெர்மல் நகர் கேம்ப் 1 பகுதியைச் சேர்ந்த தர்மர் மகன் செல்வகுமார் (19) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் மீட்க்பபட்டுள்ளது. 


மக்கள் கருத்து

அருண்Nov 9, 2019 - 01:41:25 PM | Posted IP 173.2*****

ப்ளடி திருட்டு ராஸ்கல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory