» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மில் வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயம் : போலீஸ் விசாரணை

சனி 9, நவம்பர் 2019 11:45:44 AM (IST)

நாலாட்டின்புதூரில் மில் வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் நாலுவாசல் கோட்டை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கலைசெல்வி (24), இவர் தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே இடைச்செவல் கிராமத்தில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 5ம் தேதி வேலைக்குச் சென்றவர் அதன் பின்னர் வீடுதிரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லையாம். இதுகுறித்து அவரது தாயார் ராஜம்மாள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications





Thoothukudi Business Directory