» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி - கார் மோதி விபத்து : 2பேர் பலி - 6பேர் படுகாயம்

சனி 9, நவம்பர் 2019 11:19:15 AM (IST)



எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி,  பணிக்கன்குப்பம் கிராமத்தைச் குப்பத்தைச் சேர்ந்த 8பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்னோவா காரில் புறப்பட்டு வந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகனான தமிழக வாழ்வுரிமை கட்சி நகர தொழிற்சங்க செயலாளர் ஜார்ஜ் பிராங்கிளின் (32) காரை ஓட்டிச் சென்றார். காரில், குமாரசாமி மகன் விஜி (எ) நந்தகுமார் (40), ராஜகோபால் மகன் வைத்தியநாதன் (48), செல்வராஜ் மகன் பாலு (36) அன்பழகன் மகன் ராஜ் (36), நடராஜன் மகன் செளத்ரி  (28),  ராமு மகன் ரமேஷ் (40), ராமசுந்திரம் மகன் செந்தில்குமார் (35) ஆகிய 8பேரும் வந்துள்ளனர். 

இன்று காலை 6.30 மணியளவில் எட்டயபுரம் அருகே கீழ ஈறால் பகுதியில் கார் வந்தபோது, தூத்துக்குடி துறைமுகம் நோக்கிச் சென்ற டாரஸ் லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கார் டிரைவர் பிராக்ளின், விஜி (எ) நந்தகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டுள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory