» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டம்: ஆட்சியர் தலைமையில் நேர்காணல்

சனி 9, நவம்பர் 2019 10:42:45 AM (IST)தூத்துக்குடி மாவட்டல், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில்நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியினை விரைவுப்படுத்திடவும், மேம்பாடு அடைய செய்திடவும், தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கை எளிமையாக்க தொழிற் கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமம் / மின் இணைப்பு ஒப்புதல் ஆகியவற்றை எவ்வித சிரமுமின்றி விரைந்து வழங்கிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நீட்ஸ் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்யப்பட்டு அதில் 4 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு ரூ.88.45 இலட்சம் வரையிலான கடன் உதவி பெற கடன் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் கதர் கிராம தொழில் ஆணையம் மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் இணைந்து 99 நபர்களுக்கு பல்வேறு தொழில்களை துவங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் டி.கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், கிளை மேலாளர் (டி.ஜ.ஜ.சி) முருகன், மேலாளர் சிட்கோ ஆனந்த், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், உதவி இயக்குநர், (குறு, சிறு நடுத்தர தொழில்கள்) ஜெரினா, கிளை மேலாளர், இந்தியன் வங்கி தெய்வேந்திரன், ஒருங்கிணைப்பாளர், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி பாக்கிலெட்சுமி, மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் இராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Anbu Communications


Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory