» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலவச கண் மருத்துவ முகாம் : ஏராளமானோர் பங்கேற்பு

வெள்ளி 8, நவம்பர் 2019 8:36:13 PM (IST)படுக்கப்பத்து பள்ளிவாசலில் இலவச கண்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து பள்ளிவாசலில் உத்தம நபியின் உதய தினவிழாவை முன்னிட்டு சென்னை பிலாலியா அரபிக் கல்லூரி விக்கிரவாண்டி கிளை , பிலாலியா உலமா பேரவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமுக்கு பேராசிரியர் முஹம்மது ஷிஹாப் ஆகில் பிலாலி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் வாசன் ஐகேர் கண் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டு பங்கேற்றவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தினர். 

இதில் 300 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். பாதிப்புள்ளவர்களுக்கு கண் மருந்துகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், தொழிலதிபர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பிலாலியா விக்கிரவாண்டி அரபி கல்லூரி  நிர்வாகிகள், பிலாலியா பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes
Thoothukudi Business Directory