» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியின் பிரதான சாலையில் ஆறாக ஓடும் குடிநீர் : மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

வெள்ளி 8, நவம்பர் 2019 3:31:22 PM (IST)



தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் தண்ணீர் வீணாக ஓடுவால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். 

தூத்துக்குடி, பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சிக்னல் அருகே உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலையில், அவ்வழியாக செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படும் ஒவ்வொரு முறையும், உடைப்பு ஏற்பட்ட குழாய் வழியாக குடிநீரானது வெளியேறி, சாலைகளில் ஆறாக ஓடி வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. நகரில் பிரதான சாலை, பகுதியில் இவை தென்பட்டாலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் கானாமல் கடந்து செல்வதாக பொதுமக்கள் சாட்டுகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory