» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவலர் கூட்டுறவு சங்கத்தின் ஆண்டு அறிக்கை கூட்டம் : எஸ்பி தலைமையில் நடைபெற்றது

புதன் 23, அக்டோபர் 2019 4:14:34 PM (IST)தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சங்கத்தின் 27வது ஆண்டு அறிக்கை கூட்டம் எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையில் இன்று நடைபெற்றது. 
 
தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சங்கத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரையும் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் அலுவலக உதவியாளர் முதல் நிர்வாக அதிகாரிகள் வரை சுமார் 1600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இச்சங்கத்தின் 27வது ஆண்டு அறிக்கை கூட்டம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் நடைபெற்றது. அதில் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இச்சங்கத்தில் சங்க உறுப்பினர்களுக்கு சென்னை, சிக்கன கூட்டுறவு இணையத்திலிருந்து பெற்ற நிதி மற்றும் சங்கத்தின் நிதி ஆகியவற்றிலிருந்து உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக கடன் ரூ.12 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இக்கூட்டத்தில் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ், நிர்வாகஸ்தர்கள் லூர்த்தாவாஸ், சுடலைமணி, துரைப்பாண்டி, முத்துக்கிருஷ்ணன், சுமதி, கணக்கர் மாரிப்பாண்டி, சங்க உறுப்பினர்களான காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer EducationThoothukudi Business Directory