» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சத்துமிகு சிறுதானியங்கள் பிரச்சார ஊர்தி: ஆட்சியர் துவக்கி வைத்தார்.

புதன் 23, அக்டோபர் 2019 3:31:12 PM (IST)தூத்துக்குடியில் சத்துமிகு சிறுதானியங்கள் திட்ட விளக்க பிரசார ஊர்தியினை,   ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைத் துறையின் மூலம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (சத்துமிகு சிறுதானியங்கள்) திட்ட விளக்க பிரச்சார ஊர்தி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, பிரச்சார ஊர்தியினை,   கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், ஆட்சியர் பேசியதாவது: மத்திய அரசு 10.4.2018 முதல் சோளம், கம்பு, ராகி, திணை, வரகு, பனிவரகு, குதிரைவரலி, சாமை, கோட்டு (மரகோதுமை) மற்றும் ராஜ்கிரா (விதை கீரை) போன்ற சத்துமிக்க தானியங்களை"சத்துமிகு சிறுதானியங்கள்” என அறிவித்துள்ளது. சத்துமிகு சிறுதானியங்கள் நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

குறிப்பாக, சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவையாக விளங்குகிறது. மேலும், சிறுதானியங்கள் சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மையுடையது. தூத்துக்குடி மாவட்டம் 82 சதவீதம் மானாவாரி சாகுபடி செய்யும் மாவட்டமாகும், இங்கு மானாவாரி வேளாண்மை மற்றும் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் தானியங்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் பொதுவாக சோளம் 11100 எக்டர், கம்பு 10200 எக்டர் மற்றும் குதிரைவரலி 200 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சத்துமிகு சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார ஊர்திகளை துவக்கி வைக்கப்பட்டது. 

திட்ட விளக்க பிரச்சார ஊர்தி மூலம், கயத்தார், புதூர், ஒட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலர்கள் சென்று சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு, அதிக மகசூல் செய்து, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், முன்னிலை வகித்தார். இணை இயக்குநர் (வேளாண்மை) ஆசிர் கனகராஜன், மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) தமிழ்மலர், உதவி இயக்குநர்கள் நாகராஜன் (கயத்தார்), முருகப்பன் (புதூர்), பூவனன் (விளாத்திக்குளம்), சரவணன் (ஒட்டப்பிடாரம்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory