» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் முழுவதும் சாலைகள் சேதம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதன் 23, அக்டோபர் 2019 12:10:19 PM (IST)




திருச்செந்தூர் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அதை உடனே சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் தேரடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் நகரம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக மக்கள் நடமாடவே இயலாத அளவில் உள்ளது. அதை உடனே சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சேதமான சாலைகளில் வாழைகன்றுகளை நட்டு நூதன போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டகுழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஜெயபாண்டியன், சந்திரசேகர், பொன் கல்யாண சுந்தரம், சிவதாணுதாஸ், அன்பழகன், முருகேஸ், முருகேசன், ஜெபஸ்டின்ராஜ் மற்றும் பலர்  கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory