» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாலத்தீவு அருகே தூத்துக்குடி தோணி கவிழ்ந்து விபத்து: கடலில் தத்தளித்த 9பேர் மீட்பு

புதன் 23, அக்டோபர் 2019 11:54:51 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற தோணி மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்கப்பட்டனர். 

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற ஜான்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான தோணியில் ஜெயந்திரன் ஐயாதம்பி தலைமையில் ஜோசப் லீனஸ் மைக்கேல், சுரேஷ் இருதயசாமி, டேவிட்ராஜா கிளைட்டன், உல்ஸ்டன் கிளைட்டன், ராஜேஸ் சேவியர், செல்வம் ஞானம், விஜிலஸ், மைக்கேல் ஞான சித்தன் ஆகிய 9 பேர் சென்றனர். மாலத்தீவு அருகே கடலில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9பேரும் கடலில் தத்தளித்தனர். அப்போது மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றொரு தோணியில் வந்தவர்கள் கடலில் தத்தளித்த 9பேரையும் மீட்டு, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory