» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் வைப்பு நிதியிலிருந்து திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

புதன் 23, அக்டோபர் 2019 11:28:10 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் அபராத நிதி வட்டித்தொகையில் இருந்து செயல்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது.
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உச்சநீதிமன்றத்தின் மூலம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட தொகை வைப்புநிதியாக வங்கிகளில் உள்ளது. இதில் இருந்து வரும் வட்டியில் இருந்து சுற்றுச்சூழல் மேம்படுத்திட பல்வேறு துறைகளின் மூலம செய்யப்படும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி வட்டங்களில் ஸ்டெர்லைட் அபராத நிதியில் இருந்து பெறும் வட்டி தொகையில் இருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோரம்பள்ளம் பொதுப்பணித்துறை கண்மாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும், இப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் திட்ட பணிகளும் மேற்கொள்ள திட்ட வரைவு உடனடியாக தயார் செய்ய வேண்டும். இப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஊரணி உள்ளிட்ட பணிகளை 100 சதவிதம் தூர்வாருவதற்கான திட்டங்களையும் ஊரக வளர்ச்சி முகமை மூலம் பணிளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கும், இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் இப்பகுதியில் உள்ள தங்களது துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகள், பள்ளிகளில் பணிகளை மேற்கொள்ள தேவையான திட்டங்கள் குறித்தும் உடனடியாக திட்ட வரைவு தயார் செய்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா (திருச்செந்தூர்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர்,இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பரிதா செரின், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோ ராஜா, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) இளங்கோ மற்றும் வட்டாட்சியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education
Black Forest Cakes

Anbu Communications

Nalam PasumaiyagamThoothukudi Business Directory