» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு தமிழ் ரத்னா விருது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

புதன் 23, அக்டோபர் 2019 11:24:29 AM (IST)



நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி  காமராசுக்கு தமிழ் ரத்னா விருதினை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் 

தமிழர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் ”தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விருதுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதலமைச்சரை நியூஸ் 7 தமிழின் நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

பின்னர், மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு, நியூஸ் 7 தமிழ் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்தார். இதைத்தொடர்ந்து, விருது வழங்கும் விழாவில், கட்டைக்கூத்து ராஜகோபால்-க்கு "கலை ரத்னா விருதும், புகழ்பெற்ற தமிழறிஞர் டாக்டர்.தொ.பரமசிவத்திற்கு "இலக்கிய ரத்னா விருதும், பிரளயனுக்கு "நாடக ரத்னா விருதும் வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார். 

மேலும், "கேஸ்ட்லெஸ் கலக்டிவ்" குழுவினருக்கு "இசை ரத்னா விருதும்”, சதீஷ் சிவலிங்கத்திற்கு"விளையாட்டு ரத்னா விருதும்”, ரவீந்திர குமாருக்கு சேவை ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, "ஆசிரியர் ரத்னா விருது” பகவானுக்கும், "தொழில் ரத்னா விருது” சிபி.செல்வத்திற்கும், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு"மகளிர் ரத்னா விருதும்” வழங்கி முதல்வர் எடப்பாடிபழனிசாமி கவுரவித்தார்.

"யுவ ரத்னா விருது” விழியனுக்கும், "சக்தி ரத்னா விருது” நளீனா பிரசீதாவுக்கும், வழங்கப்பட்டது. "சிறப்பு விருது” அறிவிக்கப்பட்ட மறைந்த வசனகர்த்தா கிரேஸி மோகனுக்கு விருதை அவரது சகோதரர் மாது பாலாஜி பெற்றுக்கொண்டார். "மற்றொரு சிறப்பு விருது”, புகழ்மிக்க எழுத்தாளரும், நெல்லை கவிநேசனின் நெருங்கிய எழுத்தாளமான, பாசமிகு முத்தாலங்குறிச்சி காமராசுக்கு "தமிழ் ரத்னா விருதும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அவரது சார்பாக அவரது நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள். 

இதையடுத்து, விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "அரசு திட்டங்களை செயல்படுத்த ஊடகங்கள் உந்துசக்தியாக உள்ளன. நியூஸ் 7 தமிழ் ஆண்டுதோறும் தமிழ் ரத்னா விருதுகள் வழங்குவது, சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. பசுமை புரட்சியின் நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தமிழ் ரத்னா விருது வழங்கியது போற்றத்தக்கது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், அரசுடன் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான், டெங்குவை ஒழிக்க முடியும். தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அகழ்வாராய்ச்சிகளை மாணவர்கள் பார்வையிட, தமிழக அரசு ஏற்பாடு செய்யும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory