» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித லூர்து அன்னை ஆலயத்தில் உறுதிபூசுதல் விழா

ஞாயிறு 20, அக்டோபர் 2019 12:38:57 PM (IST)தூத்துக்குடி நகரில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் உறுதிபூசுதல் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி நகரில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இங்கு  உறுதிபூசுதல் விழா நடைபெற்றது.  தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கலந்து கொண்டார். லூர்தம்மாள்புரத்திற்கு முதன்முறையாக வந்த ஆயருக்கு சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ஆயருடன் இணைந்து, மறைமாவட்ட முதன்மைக்குரு பன்னீர் செல்வம், தலைமைச் செயலர் நார்பட், பொருளர் சகாயம் மற்றும் ஆயரின் செயலர் தினேஷ் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழாவில் ஏறக்குறைய 250 பேர் உறுதிபூசுதல் என்ற அருள் அடையாளம்  பெற்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயரின் தலைமையில் சிறப்பு ஆராதனையும் திருப்பலியும் நடைபெற்றன. அவ்வமயம் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்குச் சிறப்புப் பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டன. அதன்பின் ஆயர் , பங்கில் செயல்படும் பங்குப் பேரவையினர், அன்பியப் பொறுப்பாளர்கள், பக்த சபைகள், இளையோர், பீடச் சிறுவர்கள், ஞாயிறு மறைக்கல்வி குழந்தைகள் ஆகியோரைச் சந்தித்தார். விழா ஏற்பாடுகள் அனைத்தையும் பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோ தலைமையில் பங்குப் பேரவையினர் மற்றும் புனித லூர்து அன்னை இளையோர் இயக்கத்தினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Anbu Communications

Black Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory