» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மன் கோவிலில் திருட முயன்றவர் கைது : நகைகள், பணம் பறிமுதல்

ஞாயிறு 20, அக்டோபர் 2019 12:14:31 PM (IST)

ஆறுமுகநேரி அருகே அம்மன் கோவிலில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே லட்சுமிமாநகரம் கிராமத்தில் உச்சினிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்றிரவு ஒருவர் உண்டியலை உடைத்து கொண்டிருந்த சப்தம் கேட்டுள்ளது. உடனே கிராம மக்கள் திரண்டு அங்கு சென்று பூட்டை உடைத்தவரை மடக்கிபிடித்து ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அங்கு போலீசார் ,கோவில்நிர்வாகி சின்னத்துரை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் திருட முயன்றவர் உடன்குடி நடுக்காலன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பால்துரை மகன் தங்கமுத்து (65) என தெரிய வந்தது. அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கிராமம் அம்மன் தாலி, உண்டியல் பணம் ரூ. 4932 பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் அதே கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (52) என்பவரது வீட்டில் 10 கிராம் எடையுள்ள நகை திருடியது தெரிய வந்தது. அதையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Thoothukudi Business Directory