» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் நடிகர் சீமான் மீது வழக்கு பதிவு

ஞாயிறு 20, அக்டோபர் 2019 11:52:45 AM (IST)

தமிழக அமைச்சர்களை தரைக்குறைவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணப்பாளர் நடிகர் சீமான் மீது தூத்துக்குடியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பிரேம் (58). அதிமுக பிரமுகரான இவர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணப்பாளர்  நடிகர் சீமான் தூத்துக்குடி பீச் ரோட்டில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், தமிழக அமைச்சர்களையும் பார்த்து அலிபாபாவும் நாற்பது திருடர்கள் என்று தரைக்குறைவாக பேசியுள்ளார். இதனால், சீமானை கைது செய்யவேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரனை நடத்திய தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணப்பாளர் நடிகர் சீமான் மீது 153.A, 506 (1) (B)  ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்-Oct 21, 2019 - 07:01:22 PM | Posted IP 162.1*****

பயங்கரமான வழக்குல போட்டுருக்காங்க.. அன்னான் சீமானுக்கு RSS ஆதரவு இருப்பதால், உங்களால் ஒன்னும் செய்ய முடியாது ...

ராமநாதபூபதிOct 21, 2019 - 11:02:04 AM | Posted IP 162.1*****

கைது செய்து பாத்ரூமில் வழுக்கிவிழ ஏற்பாடு செய்துதரும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

தமிழ்ச்செல்வன்Oct 21, 2019 - 09:19:45 AM | Posted IP 162.1*****

அப்படி அடிக்கடி வழக்கு போட்டு அந்த கட்சியை வளர்த்து விடுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications





Thoothukudi Business Directory