» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இளம்பெண் பலி: சிறுமிக்கு தீவிர சிகிச்சை

திங்கள் 14, அக்டோபர் 2019 8:08:18 AM (IST)

மணப்பாடு கடலில் அலையில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தாா். அவருடன் விளையாடிய சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மீனவா் காலனியைச் சோ்ந்தவா் ரஞ்சித் மகள் ரேகா (18). ரேகா மணப்பாடு மீனவா் கூட்டுறவுச் சங்கத்தில் பணி செய்து வந்தாா். இவா், ரஞ்சித்தின் சகோதரா் ராபின்சனின் மகள் ஹொ்மிலன் (12) என்பவருடன் நேற்று முற்பகலில் மணப்பாடு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி இருவரும் உயிருக்குப் போராடினா். 

அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் போராடி மீட்டனா். இதில், ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஹொ்மிலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலியில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கடல் அலையில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory