» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மினி மினிமாரத்தான் போட்டிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு,

திங்கள் 14, அக்டோபர் 2019 7:43:37 AM (IST)

தூத்துக்குடியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மினிமாரத்தான் போட்டியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தூத்துக்குடியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தூத்துக்குடியில் நேற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, போலீசில் அனுமதி பெறப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் வருகையையொட்டி மினிமாரத்தான் போட்டிக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் போட்டி நடைபெறுவதாக இருந்த முத்துநகர் கடற்கரைக்கு போட்டியாளர்கள் வரத்தொடங்கினர். தொடர்ந்து தூத்துக்குடி டிஎஸ்பி பிரகா‌‌ஷ் தலைமையிலான போலீசார் மினிமாரத்தான் போட்டி நடத்தக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மினிமாரத்தான் போட்டிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு, நேற்று முன்தினம் திடீரென அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் வருகையால், போட்டிக்கு பாதுகாப்பு வழங்க போதிய போலீசார் இல்லை என்று கூறிய அதிகாரிகள், நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசை குவித்தனர். முதல்-அமைச்சர் ஒரு மாவட்டத்துக்கு வரும்போது, மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்பது சட்டத்துக்கு புறம்பாக உள்ளது. போலீசார் நேர்மையான நிலைபாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory