» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது: நடிகை குஷ்பு பேட்டி

ஞாயிறு 13, அக்டோபர் 2019 9:03:44 PM (IST)

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை. வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தெரிய வில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வில்லை. மாறாக தமிழகத்தில் கடன் சுமைதான் அதிகரிக்கிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போதிலும் சரி, தற்போதும் சரி எந்தவித மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. நாங்குநேரியில் அதிகார பலம், பணப்பலத்தை வைத்து அ.தி.மு.க. வெற்றி பெற நினைக்கிறது. ஆனால் அது நடக்காது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கோட்டை. இங்கு காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு மாறியுள்ளனர். அவர்கள் தெளிவாக உள்ளனர். எனவே அ.தி.மு.க. வின் பணப்பலம் இங்கு வெற்றி பெறாது என குஷ்பு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory