» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இருளில் மூழ்கிய உணவுத் திருவிழா : பொதுமக்கள் அதிருப்தி‍- வியாபாரிகள் கலக்கம்!

ஞாயிறு 13, அக்டோபர் 2019 8:19:22 PM (IST)தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ரோச் பூங்காவில் உணவுத் திருவிழாவில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்..

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நிலாச் சோறு மாதாந்திர உணவுத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு ரோச் பூங்காவில் நேற்று துவங்கியது.  இந்த உணவு திருவிழாவில் நகரின் பிரசித்தி பெற்ற உணவு நிறுவனங்களின் பாரம்பரிய உணவுவகைகள் மற்றும் சத்தான தின்பண்டங்கள் இடம் பெறவுள்ளது எனவே பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து நிலாச் சோறு உண்டு களித்து மகிழுமாறு மாந்கராட்சி நிர்வாகம் மக்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தது.

இந்நிலையில், 2வது நாளான இன்று ரோச் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது ரோச் பூங்கா முழுவதும் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து பூங்காவில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கினர். உணவு பெற்ற மக்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறு செல்போன் மூலம் லைட் அடித்து உணவை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

வியாபாரிகளோ கொண்டு வந்த உணவு தயாரிக்க பயன்படும் பொருட்கள் பூராவும் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக ஜெனரேட்டரை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு சில வியாபாரிகள் மினி லாரி மூலம் லைட் அடித்து தங்களது வியாபரத்தை காப்பாற்றினர். இருப்பினும் மின் தடை அதிக நேரம் நீடித்ததால் வியாபாரம் முடங்கியது என வியாபாரி ஒருவர் தெரிவித்தார். தொடக்க நாளான நேற்று மட்டும் ஜெனரேட்டர் பயன்படுத்திய மாநகராட்சி நிர்வாகம் இன்றும் அதற்கு ஏற்பாடு செய்யாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மாந்கராட்சி நிர்வாகம் தூத்துக்குடியில் அடிப்படை வேலைகள் எதுவும் செய்யாமல் மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் நிலையில், உணவுத்திருவிழாவிலும் மாந்கராட்சி நிர்வாகம் சரிவர ஏற்பாடு செய்யாதது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Oct 14, 2019 - 10:32:10 AM | Posted IP 162.1*****

எந்த அரசு விழாவாக இருந்தாலும் அந்த விழாவுக்கு ஏதாவது ஒரு மந்திரி வந்தால் மட்டுமே அந்த விழா சிறப்பாக தடபுடல் ஏற்பாடு செய்யப்படும் அல்லது இப்படித்தான். விழாவுக்கு வருவது நம்ம ஊர் கேணயங்கதானே என்ற மமதை எல்லா அரசு அதிகாரிகளுக்கும் உண்டு.

rajaOct 14, 2019 - 01:05:45 AM | Posted IP 173.2*****

pls do basic need to people.... we don't want this kind of food festival... this no use and nothing

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory