» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் தீப ஒளி : கின்ஸ் அகாடமி பாராட்டு

வியாழன் 10, அக்டோபர் 2019 8:17:09 PM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்மொழி நீக்கப்பட்டதற்கும்,தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கும் தூத்துக்குடி கின்ஸ் அகாடமி பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் எந்த தேர்வுக்கும் ஆங்கில மொழி அவசியம் இல்லை என்ற நிலை இருந்ததினால் தமிழக மாணவர்கள் முழு மூச்சாக ஆங்கிலத்தை ஒதுக்கி வந்தார்கள். இதனால் மத்திய அரசு தேர்வுகளான எஸ்எஸ்சி, யூபிஎஸ்சி போன்ற தேர்வுகள் எதனையும் எதிர் கொள்ள தமிழக மாணவர்கள் பயந்தார்கள். இந்த தேர்வுகளில் ஆங்கிலம் கட்டாய பாடமாக இருக்கிறது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகை தவறான தேர்வு திட்டம் தான் அமலில் இருந்தது வருகிறது. இதனால் நமது மாணவர்களின் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து போனது.இப்போது இந்த தேர்வு திட்டம் முற்றிலுமாக மாற்ற பட்டிருக்கிறது. இதன்படி தமிழ் தெரியாத எந்த மாணவரும் தேர்வில் வெற்றி பெற முடியாது. அது போல ஆங்கிலமொழி அறிவு கண்டிப்பாக தேவை. இதனால் தமிழக மாணவர்கள் ஆங்கிலம் படிக்க துவங்குவர். அதனால் மத்திய அரசு தேர்வுக்கும் தங்களை எளிதாக தயார்படுத்துவார்கள். இது தமிழக மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

மத்திய அரசு தேர்வாணையத்தை போலவே தமிழக அரசு தேர்வாணையமும் தேர்வு அறிவிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும்.கடந்த 11.11.2018 அன்று நடந்த குரூப் -2 பணிக்கான முதல்நிலை தேர்வின் முடிவுகள் சரியாக ஒரு மாத காலத்தில் 11.12.2018 வெளியிடப்பட்டது தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

இதே போல தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2017, 2018 மற்றும் 2019 என தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக சீருடை பணியாளருக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போலீஸ், தீயணைப்பு மற்றும் ஜெயிலராக பணியிடம் பெற்று வருவது முன் எப்போதும் இல்லாதது. இதற்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டும் அதற்கு முன்பாக 2008ம் ஆண்டுகளிலும் மட்டுமே இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன.

இவ்வாறாக தமிழக அரசு தேர்வுகளில் சீர்திருத்தம் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் தீப ஒளியை ஏற்றியிருக்கும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும், தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வு வாரியத்திற்கும் எங்களது கின்ஸ் அகாடமி மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கின்ஸ் அகாடமி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Thoothukudi Business Directory