» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லூரியில் மகாத்மாகாந்தி பிறந்தநாள் விழா

வியாழன் 10, அக்டோபர் 2019 7:35:11 PM (IST)
தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவில் மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

ஜெயண்ட் குரூப் ஆப் தூத்துக்குடி மற்றும் சகேலி ஆகியவை தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியுடன் இணைந்து மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவை முன்னிட்டு காந்தியின் சிந்தனைகளும் இன்றைய சமுதாயம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி., பரிசு வழங்கி பாராட்டினார்.

பின் சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை சிறப்பிக்க வெளியிட்ட இந்தியா மற்றும் வெளிநாட்டு அரிய வகை தபால்தலைகள், தபால் உறைகள் வைக்கப்பட்ட கண்காட்சியை எஸ்பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட முப்படை வீரர் வாரியத்தின் உபதலைவர் லெப்டினன்ட் கர்னல் சுந்தரம், செந்தில் கண்ணன், ஜெயகிருஷ்ணன், வழக்கறிஞர்  சொர்ணலதா, தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications
Black Forest Cakes


CSC Computer EducationThoothukudi Business Directory