» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் - கோவைக்கு புதிய ரக விரைவு பேருந்து : பயணியர்கள் வரவேற்பு

வியாழன் 10, அக்டோபர் 2019 7:19:38 PM (IST)சாத்தான்குளம் வழியாக கோவைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு பேருந்து புதிய ரக பேருந்தாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இதனை பயணியர்கள் வரவேற்றுள்ளனர்.  இதேபோல் நிறுத்தப்பட்ட பேருந்தையும் இயக்கிட பயணியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து  கோவைக்கு நெல்லை, ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி வழியாக தடம் எண் 626இ  பேருந்து  இயக்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து இயக்கப்படுவது  நெல்லை விரைவு  போக்குவரத்துகழகத்துக்கு மாற்றப்பட்டதால் திசையன்விளையில் இருந்து சாத்தான்குளம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த பேருந்து பழைய மாடலாக இயக்கப்பட்டதால் பயணியர்கள் புதிய ரக பேருந்தாக மாற்ற வேண்டும் எனவும், திசையன்விளையில் சாத்தான்குளம் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 625 ஐ மீண்டும் இயக்கிடவும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் சாத்தான்குளம் வழியாக இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்தானது  புதியரக மாடல் வண்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. கோரிக்கையை ஏற்று இயக்கப்பட்ட  புதியரக மாடல் பேருந்தை பயணியர்கள் வரவேற்றதுடன்  இயக்கிய அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், இப்பகுதியில் இருந்து  கோவைக்கு வியாபாரிகள் முதல் பலர் சென்று திரும்புகின்றனர். முன்பு இரு பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது இயக்கப்பட்ட ஒரு பேருந்தும் திசையன்விளை வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.இதைபோல் நிறுத்தப்பட்டுள்ள தடம் 625ஐ சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக திருப்பூர், கோவைக்கு  இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் திருப்பூர், கோவை செல்பவர்கள்  பயனடைவர். ஆதலால் அதிகாரிகள் இதனை  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu Communications

Thoothukudi Business Directory