» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்நிலையங்களில் சுத்தம் செய்யும் பணி துவக்கம் : டெங்குவை தடுக்க நடவடிக்கை

வியாழன் 10, அக்டோபர் 2019 7:04:51 PM (IST)டெங்கு பரவாமல் தடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் தண்ணீர் சேராமல் சுத்தம் செய்யும் பணி துவங்கியது.  

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் அனைத்தையும் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து டெங்கு கொசு உருவாவதை தவிர்க்கவும், பொது மக்களிடமும் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அனைத்து காவல் துறையினருக்கும் மாவட்ட எஸ்பி, அருண் பாலகோபாலன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏடிஸ் கொசுக்களினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் மழை நேரங்களில் வீட்டிற்கு வெளியே உள்ள பழைய கேன்கள், தொட்டிகள், பழைய டயர்கள் மற்றும்  பழைய பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரிலிருந்து உருவாகிறது. 

ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரும், தங்கள் காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை சுத்தமாக வைத்து இந்த வகை கொசுக்கள் உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்களிடம் டெங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.  

அதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது, மேலும் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் பொது மக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதே போன்று  மாவட்ட காவல் துறை அலுவலகத்திலும் நல்ல தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ஆனந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி ராஜா, சுகாதார ஆய்வாளர்கள்  காமாட்சி, அருணாச்சலம், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர்  மாரியப்பன், தனிப்பரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ்பத்மநாபன், உதவி ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu CommunicationsThoothukudi Business Directory