» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு கீதாஜீவன் எம்எல்ஏ அழைப்பு

வியாழன் 10, அக்டோபர் 2019 5:30:35 PM (IST)

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் பள்ளி மாணவ – மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை : பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் கடந்த ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நடைபெற உள்ளது.

கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்கவும், மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்பவும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலும் வருகிற 12.10.2019 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. இப்போட்டிகள் அனைத்திலும் 9, 10 மற்றும் 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ – மாணவியர் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு (1) கல்விக் கொள்கை அன்றும்….இன்றும் (2) கலைஞர் கனவுகளின் செயல்வடிவம் தலைவர் ஸ்டாலின் இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஓரு தலைப்பில் 5 நிமிடத்திற்கு மிகாமல் பேச வேண்டும். கட்டுரைப் போட்டிக்கு தலைப்பு (1) அன்னைத் தமிழும் - அண்ணா… கலைஞரும். (2) பெரியார் என்றும் தேவை ஏன்?. ஆகிய இரு தலைப்புகளில் ஏதேனும் ஓரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். பேனா மட்டும் எடுத்து வரவேண்டும். தாள்கள் போட்டி நடைபெறும் அறையில் தரப்படும்.

கவிதை ஒப்புவித்தல் போட்டிக்கு, தலைப்பு இணைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டு கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை போட்டியில் ஒப்பித்தல் வேண்டும் இசையுடனோ, ஒப்பனை அணிந்தோ கவிதைகளை ஒப்பிக்கக்கூடாது. இக்கவிதை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறாதவர்கள் மாவட்ட தி.மு.க அலுவலகமான தூத்துக்குடி கலைஞர் அரங்கில் பெற்றுக்கொள்ளளாம்.

போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் மாணவ – மாணவியர் முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.5,000/- மூன்றாம் பரிசாக ரூ2500/- ஆறுதல் பரிசாக ரூ.1000/-வீதம் 10 பேருக்கும் வழங்கப்படும். இது தவிர போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ – மாணவியருக்கும் மாவட்ட தி.மு.க சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான நான் (கீதாஜீவன்) தலைமை தாங்குகிறேன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்புரை ஆற்றுகிறார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பா சங்கர், பிரதிப், இம்மானுவேல், டேவிட் ராஜ், கருப்பசாமி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் சுந்தர், முத்துராமன், செல்வின், நிர்மல் ராஜ், சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகேபிரியேல் நன்றியுரை ஆற்றுகிறார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ – மாணவியருக்கு தி.மு.க மாநில இளைஞரணி இணைச் செயலாளர் தாயகம்கவி எம்எல்ஏ, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் பரிசுகள் வழங்க இருக்கிறார்கள்.

மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடிக்கும் மாணவ – மாணவியர் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதில் முதல் பரிசாக ரூ.25,000/- இரண்டாம் பரிசாக ரூ.15,000/- மூண்றாம் பரிசாக ரூ10,000/- ஆறுதல் பரிசாக ரூ.5000/- வீதம் 10 பேருக்கும் வழங்கப்படும். போட்டிகளுக்கான அழைப்பிதழ் கிடைக்காத மாணவ – மாணவியர் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். மேலும் விபரங்களுக்கு 98421-66201, 70925-51261 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory